கொரோனா வந்தாலும் பாசிசம் தமிழகத்தில் வரவே முடியாது – நாஞ்சில் சம்பத் அதிரடி!

Share this News:

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வந்தாலும் பாசிசம் வரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ரஜினி நேற்று கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரது பேட்டி புஸ்வானமானது. அனைத்து செய்தியாளர்களையும் அழைத்து ஏதேதோ சொல்லி, அவரிடம் எதிர்பார்த்த கட்சி தொடர்பான அறிவிப்பு கடைசி வரை வரவேயில்லை.

இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து நாஞ்சில் சம்பத் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது:

“கொரோனா வைரஸ் வந்தாலும் தமிழகத்தில் ஃபாசிச வைரஸ் வராது. குட்டையைக் குழப்பி குடிகெடுக்க நினைப்பவருக்கும்; கோழி முட்டையில் முடி முளைக்கும் என்று முட்டாள்தனமாக நம்பியவர்களுக்கும்; திராவிடத்தைக் கருவறுக்க கனவு கண்ட மணியனுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்!” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply