இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

Share this News:

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள பணம். நான் பாஜகவிலிருந்து தான் விலகியுள்ளேன், இந்துத்வா கொள்கையிலிருந்து விலகவில்லை, யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன், விரைவில் அனைவரும் இணைந்து ராமர் கோவிலை கட்டுவோம், மகாராஷ்டிராவிலிருந்து ராம பக்தர்கள் தங்குவதற்கு அயோத்தியில் இடம் ஒதுக்க வேண்டி யோகியிடம் கேட்டுள்ளேன்” என்றார்.

மகாராஷ்டிராவில் மதசாற்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதால் இந்துத்வா கொள்கையிலிருந்து உத்தவ் தாக்கரே மாறி வருகிறார் என்ற கருத்துக்கு உத்தவ் தாக்கரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.


Share this News:

Leave a Reply