பாஜக தலைவர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

புதுடெல்லி (09 ஜூன் 2020): பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெற்கு டெல்லியின் சாக்கெட்டில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளை கண்ட பின்னர் கடந்த 4 நாட்களாக மேக்ஸ் சாகேட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டியிருந்தாலும், அவரது தாயார் அறிகுறியில்லாமல் இருந்தார். தற்போது இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி…

மேலும்...

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறும் பாஜக எம்பி!

புவனேஸ்வர் (09 ஜூன் 2020): சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்ந்து விதியை மீறி வருகிறார் ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்பி அபராஜிதா சாரங்கி. நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் அங்கு பா.ஜ.க.வை சேர்ந்த பெண் எம்.பி. அபராஜிதா சாரங்கி, பறக்கும் பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று நேற்று கலந்து கொண்டார். இதில் சமூக இடைவெளி…

மேலும்...

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பெண் பாஜக பிரமுகர் – வைரல் வீடியோ!

புதுடெல்லி (06 ஜூன் 2020): பாஜக பிரமுகரும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகத் என்ற பெண் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியானா மாநிலம் பால சமந்த் மண்டி என்ற இடத்தில் சோனாலி, விவசாயிகள் சிலருடன் பருப்பு வியாபாரத்துக்கு சென்றுள்ளார். அப்போது சுல்தான் சிங் என்ற மார்க்கெட் கமிட்டி அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனாலி, காலணியால் சுல்தானை தாக்கினார். கேலி செய்ததற்காக அடித்ததாக சோனாலியும், தேர்தல்…

மேலும்...

கேரளா சம்பவத்துக்கு மதச்சாயம் பூசுவதா? – பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மதச்சாயம் பூசுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை….

மேலும்...

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி திடீர் நீக்கம்!

புதுடெல்லி (02 ஜூன் 2020): டெல்லி பாஜக தலைவராக இருந்த மனோஜ் திவாரி டெல்லி பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மனோஜ் திவாரிக்கு பதிலாக, முன்னாள் வட டெல்லி மாநகராட்சி மேயரான ஆதேஷ் குப்தா டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ல் டெல்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட மனோஜ் திவாரியின் செயல்பாடுகள்தான் , பிப்ரவரி மாதம் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. அதேபோல சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் தலைவராகவும்,…

மேலும்...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மரணம்!

சேலம் (02 ஜூன் 2020): தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார். கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக…

மேலும்...

பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு…

மேலும்...

நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வுதான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (31 மே 2020): பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வைத்து அகமதாபாத்தில் நடைபெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வு, குஜராத்திலும் மும்பை மற்றும் டெல்லியிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டியுள்ளார். எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கை செயல்படுத்தியது மத்திய அரசு ஆனால் இப்போது மாநிலங்களை குற்றம் சாட்டுகிறது என்று ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் நடைபெறும் விகாஸ் அகாடி அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு…

மேலும்...

விராட் கோலி அனுஷ்கா ஷர்மா விவாகரத்து – பாஜக எம்.எல்.ஏ பகீர் கருத்து -வீடியோ!

லக்னோ (29 மே 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜார் வலியுறுத்தியுள்ளார். அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘பாட்டல் லோக்’ என்ற வெப் சீரிஸ் இந்திய வகுப்பு வாத ஒற்றுமைக்கு எதிராக உள்ளதாக நந்த் கிஷோர் குர்ஜார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் குர்ஜார், “விராட் கோலி ஒரு தேசபக்தர்,…

மேலும்...

கொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (28 மே 2020): பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில்…

மேலும்...