கொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் முதல் மரணம்!

மதுரை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிபடுத்தினார். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு,…

மேலும்...

குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான நியாய விலைக் கடை பொருள்கள் விலையேதும் இல்லாமல் வழங்கப்படும் எனவும் முதல்வா் பழனிசாமி அறிவிப்புச் செய்தாா். இதுகுறித்து, பேரவை விதி 110-ன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:- கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து…

மேலும்...

வீட்டில் இருக்க முடியாவிட்டால் சிறையில் இருக்க நேரிடும் – புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

புதுச்சேரி (24 மார்ச் 2020): ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். உலகில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர…

மேலும்...

கொரோனா பரவலை தடுக்க கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான் – யூசுப் பதான் உதவி!

புதுடெல்லி (24 மார்ச் 2020): நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருவதையடுத்து, 4,000க்கும் மேற்பட்ட முகமூடிகளை மக்களுக்கு வழங்க இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்ட இர்பான், “சமூகத்துக்காகச் சிறிய விஷயம் செய்கிறோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து, சுகாதாரத்துக்குத் தேவைப்படும் விதமாக மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்,” என்று பதிவிட்டார். மேலும் “இது ஒரு சிறிய தொடக்கமாகும்,…

மேலும்...

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் மரணம் – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

மும்பை (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மும்பையை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்….

மேலும்...

101 நாள் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் முடிவுக்கு வந்தது!

புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, டெல்லியில் உள்ள ஷஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது எனக்கூறி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, டில்லி அரசு உத்தரவிட்டது. எனினும், ஷஹீன் பாக் போராட்டம்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸிலிருந்து இந்தியா வந்த 19 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனாவின் வீரியத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை – பிரதமர் மோடி கவலை!

புதுடெல்லி (24 மார்ச் 2020): கொரோனா வைரஸின் தாக்கத்தை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றி, நீங்கள் பாதுகாப்புடன் இருந்து உங்கள் குடும்பத்தினரை கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். கரோனா…

மேலும்...

தமிழகத்திலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (23 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும்…

மேலும்...