இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் மரணம் – பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

137

மும்பை (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மும்பையை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  மதத்தலைவர்களுடன் தலைமை செயலர் அவசரக் கூட்டம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.