அதிராம்பட்டினத்தில் யாருக்கும் கொரோனா இல்லை – வதந்தி பரப்புபவர்களுக்கு விஏஓ எச்சரிக்கை!

தஞ்சாவூர் (30 மார்ச் 2020): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை என வி.ஏ.ஓ தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. எனினும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் அதிராம்பட்டினத்திற்கு வருகை புரிய அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்….

மேலும்...

கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்!

திருவனந்தபுரம் (30 மார்ச் 2020): கேரளாவில் ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காமல் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூர்…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் பாதிப்பு!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன்…

மேலும்...

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை!

சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்திற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பொருட்கள் தடைபட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை தற்போது 20 முதல்…

மேலும்...

பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): நாடு தழுவிய திடீர் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சில வளா்ந்த நாடுகள் முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், இந்தியாவிலோ நிலைமை வேறுபட்டதாகும். நாடு தழுவிய ஊரடங்கு தவிர இதர பல்வேறு நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நாட்டிலுள்ள ஏழை மக்கள் தினசரி வருமானத்தையே…

மேலும்...

இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையில் பயங்கர தீ!

புதுடெல்லி (29 மார்ச் 2020): டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை இரவு 08:45 க்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் யாருக்கும் காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது விபத்தா? அல்லது வேறு எதுவும் சதியா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் நாடெங்கும் ஊரடங்கு…

மேலும்...

கொரோனா எதிரொலியால் குறைந்த வாட்ஸ் அப் சேவை – திணறும் வாடிக்கையாளர்கள்!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா வைரஸ் காரணமாக வாட்ஸ் அப் தனது சேவையை குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும்படி…

மேலும்...

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர். இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே…

மேலும்...