துபாய் வழியாக சவூதி செல்ல இந்தியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ரியாத் (10 செப் 2021): சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே மீண்டும் விமான சேவை இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தினசரி புக்கிங்குகளை தொடங்கியுள்ளது. கோவிட் பரவலை தடுக்கும் விதமாக சவூதி அரேபியா கடும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது கட்டம் கட்டமாக விமான போக்குவரத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சவூதி துபாய் விமான போக்குவரத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவூதிக்கு…

மேலும்...

இந்தியா ஆப்கான் உறவை தொடர தாலிபான் விருப்பம் !

காபூல்(30 ஆக 2021): இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் உறவை தொடர விரும்புவதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தாலிபான் இயக்கத்தின் மூத்த தலைவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாய் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “”இந்த துணைக் கண்டத்திற்கு இந்தியா மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களைப்…

மேலும்...

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 4 -வது போட்டியில், உலகின் 3 -வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி பாராலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் பவினா படேல் படைத்தார். பாவினா 7-11, 11-7,…

மேலும்...

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (28 ஆக 2021): இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சனிக்கிழமை 46,759 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, கொரோனா வழக்கு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 40,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 32,801 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 4,654 வழக்குகளும், தமிழ்நாடு 1,542 வழக்குகளும், ஆந்திரப் பிரதேசம் 1,512 வழக்குகளும், கர்நாடகா 1,301 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில்…

மேலும்...

சவூதியிலிருந்து விடுமுறையில் இந்தியா சென்றவர்களுக்கு நற்செய்தி!

ரியாத் (24 ஆக 2021): சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்தியர்கள், மூன்றாம் நாட்டில் தனிமைப்படுத்தல் தேவையில்லாமல் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள் அறிவித்தனர். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்ற பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்த இந்திய குடிமக்கள் நேரடியாக சவூதி திரும்ப முடியும் என்று சவுதி அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது…

மேலும்...

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது சிரமம் – எச்சரிக்கை அறிக்கை!

புதுடெல்லி (23 ஆக 2021): நாட்டில் கோவிட் மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்றும், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் தாக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கை ஒன்றை பி ரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில்,…

மேலும்...

ஆப்கானிஸ்தானில் மேலும் பல இந்தியர்கள் சிக்கித் தவிப்பு!

புதுடெல்லி (20 ஆக 2021): ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர்ட் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம் அனுமதி கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைபற்றிய நிலையில் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அங்கு சிக்கிய இந்தியர்கள் பலர் விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியா திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதற்கிடையே அங்கு மேலும் சிக்கியிருக்கும் 400 க்கும் அதிகமான இந்தியர்களை இந்தியா கொண்டு வர சார்ட்டர் விமானங்களை அனுப்ப இந்தியா அமெரிக்காவிடம்…

மேலும்...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவில் நேற்று கொரோனா உயிரிழப்பு நேற்று முன் தினத்தை விட சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (19.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 3,23,22,258 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 39,157 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது….

மேலும்...

ஆப்கான் சிறையிலுள்ள இளம் பெண்ணை மீட்டுத்தர ஒன்றிய அரசுக்கு தாய் கோரிக்கை!

திருவனந்தபுரம் (19 ஆக 2021): மூளை சலவை செய்யப்பட்டு கடத்தப்பட்டு ஆப்கான் சிறையில் உள்ள மகளை மீட்டுத்தர வேண்டி தாய் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிந்து சம்பத், இவர் ஒன்றிய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில், “திருவனந்தபுரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் இருந்த எனது மகள் நிமிஷா (பாத்திமா என பெயர் மாற்றிக் கொண்டார்) அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மூலம் மூளை சலவை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...