திமுகவின் குடியாத்தம் எம்.எல்.ஏ மரணம் – திமுகவினர் அதிர்ச்சி!

சென்னை (28 பிப் 2020): குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவர் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை முடிந்து 20 நாள்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9.20 மணியளவில் காலமானார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான் குடியாத்தம் தொகுதியில் இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு திமுகவினர்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார். 2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு…

மேலும்...

முன்னாள் எகிப்து அதிபர் ஹுஸ்னி முபாரக் மரணம்!

கெய்ரோ (25 பிப் 2020): எகிப்து முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஹுஸ்னி முபாரக் எகிப்து ராணுவ மருத்துவமனையில் 91வது வயதில் காலமானார். முர்ஸி ஆட்சியில் ஹுஸ்னி முபாரக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு 2017ல் விடுதலை ஆனார். எகிப்த்தை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் ஹுஸ்னி முபாரக் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பாதுகாப்பற்ற திரைப்பட படபிடிப்பு தளங்கள் – இதுவரை ஏழுபேர் பலி!

X சென்னை (22 பிப் 2020): சென்னையில் பாதுகாப்பு இல்லாத திரைப்பட படப்பிடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அண்மைக்காலமாக திரைப்பட படப்பிடிப்பில் நிகழும் விபத்துகள், அத்துறையினரை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக திரைப்படத்துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். சென்னையில் ஒரு காலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் அதிகமாக நடைபெற்ற வெளிப்புற திரைப்பட படப்பிடிப்புகள் இன்று வேறு பகுதிகளுக்கு நகா்ந்துள்ளன. மேலும் வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தின்…

மேலும்...

சிவானந்த குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் மரணம்!

சென்னை (18 பிப் 2020): சென்னையில் உள்ள சிவானந்த குருகுலத்தை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் ராஜாராம் செவாய் அன்று காலமானார். அவருக்கு வயது 67. கடந்த சில காலங்களாக உடல்நிலை குறைவின் காரணமாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பல ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளித்த அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம். நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2,…

மேலும்...

முன்னாள் முதல்வரின் மகன் மர்ம மரணம்!

லண்டன் (12 பிப் 2020): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் லண்டனில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வராக இருந்தவர் காங்கிரசைச் சேர்ந்த கலிக்கோ புல். இவரது மகன் ஷுபான்சோ புல் (20) என்பவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்துள்ளார். தற்போது ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று…

மேலும்...

மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மரணம்!

கொச்சி (09 பிப் 2020): மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பி.பரமேஸ்வரன் காலமானார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் பரமேஸ்வரன், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்களுடன் இணைந்து பாரதீய ஜனசங் அமைப்பில் தலைவராக இருந்தவர் பரமேஸ்வரன். இந்நிலையில் தனது 91 வது வயதில் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் உயிரிழந்தர். கேரளாவில் ஆலப்புழாவில் பிறந்த இவரது உடல் கொச்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பொதுமக்கள்…

மேலும்...

கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மரணம்!

பீஜிங் (06 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 563 பேர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர் இந்ந்நிலையில் வுஹான் நகரில் உள்ள மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 10 நாட்களாக, ஓய்வுறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங்…

மேலும்...

குழந்தையை இழந்தும் போராட்டத்தை கைவிடாத தாய் – ஷஹீன் பாக்கில் நிகழ்ந்த சோகம்!

புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் உயிரிழந்து  பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார் நான்கு மாத குழந்தை. இந்தியாவின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஷஹீன் பாக்கில் பெண்கள் 50 நாட்களை தாண்டியும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிரட்டல் துப்பாக்கிச் சூடு போன்றவை நிகழ்ந்த போதும் எதற்கும் அச்சப்படாமல் அங்கு…

மேலும்...