திமுக எம்.எல்.ஏ. மரணம்!

135

சென்னை (27 பிப் 2020): திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பிபி சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

2006-11 திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி சாமி, 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை (Stem Cells) தானமாக வழங்கும் கேரள மாணவி!

தற்போது, அக்கட்சியின் மீனவர் அணி செயலாளராக இருந்த சாமி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி தனது 57-வது வயதில் அவர் காலமானார். சாமியின் மறைவுக்கு கட்சியின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.