கொரோனாவால் தமிழகத்தில் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு!

சென்னை (15 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 156 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 770…

மேலும்...

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் சேரும் மாணவர்கள் – அமைச்சர் மகிழ்ச்சி!

கோவை (12 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். அவரிடம் வருகிற 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளிக்கும் போது, தமிழகத்தில் தற்போது…

மேலும்...

முதல்வர் எடப்பாடி உட்பட எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை!

சென்னை (11 செப் 2020): தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதையொட்டி எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபையை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

மேலும்...

தமிழகத்தில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது!

சென்னை (08 செப் 2020): தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து 50 சதவீதம் மற்றும் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொது பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களாக பஸ்கள் அந்தந்த பணிமனையிலேயே நிறுத்தப்பட்டன. டிரைவர்-கண்டக்டர்களும் ஓய்வில் இருந்தார்கள். இந்தநிலையில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கடந்த மாதம்…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (18 ஆக 2020): தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில்…

மேலும்...
TN-Students

தேர்வெழுதாமலே, தேர்ச்சி,10-ஆம் தேதிக்கு மகிழ்ச்சி!

சென்னை (07 ஆகஸ்ட், 2020):ஆகஸ்ட் 10ஆம் தேதி, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக உயர்கல்வி தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி அறிவித்துள்ளார். உலகையே உலுக்கி வரும் அதிபயங்கர கொடிய நோயாக உருவெடுத்திருக்கின்ற கொரோனா, அனைவரின் இயல்பு வாழ்கையையும் புரட்டி போட்டு விட்டது. பல்கலைகழகம், கல்லூரி, பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு…

மேலும்...

மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை – தமிழக முதல்வர் திட்டவட்டம்!

சென்னை (03 ஆக 2020): “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில…

மேலும்...

கொரோனா: சென்னையில் படிப்படியாக குறைவு – மற்ற மாவட்டங்களில் தொடரும் அதிகரிப்பு

சென்னை (21 ஜூலை 2020): கொரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகரித்தபடி உள்ளன. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

மேலும்...

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை!

சென்னை (13 ஜூலை 2020): தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

மேலும்...

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்!

சென்னை (11 ஜூலை 2020): அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் சமூக விலகலை பின்பற்றி புத்தகம் வழங்கவும் பள்ளி கல்வித்துறை அந்த அறிவிபில் கூறியுள்ளது.. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் மென்பொருள் பதிவேற்றத்திற்கு…

மேலும்...