அமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக!

சென்னை (08 ஜூலை 2020): தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக முதல் கட்ட…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 4280 பேர் கொரோனாவால் பாதிப்பு!

சென்னை (06 ஜூலை 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளன. சென்னையில் ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து ஒன்றாகவும், சென்னையில் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 352 பேருக்கும், அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 251…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று – 60 பேர் உயிரிழப்பு!

சென்னை (30 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்பட 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (28 ஜூன் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம்தான அதிகப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,805 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3,713 பேரில் 2,300 பேர் ஆண்கள், 1,412 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார் மேலும் கடந்த 24…

மேலும்...

மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்கள் செல்ல இ.பாஸ் அவசியம் – முதல்வர் உத்தரவு!

சென்னை (25 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு…

மேலும்...

கூடு விட்டு கூடு பாயும் கொரோனா – சென்னையிலிருந்து வெளியேறியவர்களால் விபரீதம்!

சென்னை (22 ஜூன் 2020): சென்னையை விட்டு பொதுமக்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதால் தமிழகமெங்கும் கொரோனா அதிரடியாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜுன் 19ஆம் தேதி முதல் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்லாயிரம் மக்கள் சென்னையை விட்டு புறப்பட்டு சொந்த ஊர் வர தொடங்கினர். இபாஸ் வாங்கியும் இ பாஸ் இல்லாமலும்…

மேலும்...

தமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது!

சென்னை (21 ஜூன் 2020): தமிழகத்தில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் இன்று காலை 10:17 மணிக்கு தெரிய தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 01:30 வரை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட இடங்களில் தெரியும் சூரிய கிரகணம், 34 சதவீதம் வரை தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஜூன் 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள நிலையில் இந்தியாவிலும் அது அதி வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 2,141 பேருக்கு கொரோனா – 49 பேர் மரணம்!

சென்னை (18 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக இன்று 2 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் மட்டும்…

மேலும்...