அடுத்த அதிர்ச்சி – தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 44 பேர் மரணம்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை மட்டும் 44 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதி வேகத்தில் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,504 – ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,244 – ஆகவும் உயர்ந்துள்ளது….

மேலும்...

தமிழகத்தில் 45 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளிகள்!

சென்னை (15 ஜூன் 2020): தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23…

மேலும்...

தொடரும் கொரோனா அறிகுறி இல்லா மரணங்கள் – அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

சென்னை (10 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று மட்டும் 1927 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அறிகுறி எதுவும் இல்லா மரணங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், அரசு மருத்துவமனையிலிருந்து 12 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும்…

மேலும்...

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு!

சென்னை (02 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஜூன் 2 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன….

மேலும்...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் மரணம்!

சேலம் (02 ஜூன் 2020): தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். கே.என் லட்சுமணன். 2 முறை தமிழக பாஜ தலைவராக இருந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு காலமானார். கே.என்.லட்சுமணன் மறைவிற்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக…

மேலும்...

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் ஆலோசனை!

சென்னை (01 ஜூன் 2020): தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

மேலும்...

இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி!

சென்னை (01 ஜூன் 2020): இறுதி சடங்கில் 50 பேர் பங்கேற்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளர்வு குறித்த அறிவிப்பில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன என்பது தொடர்பாக வெளியிடும் போது…

மேலும்...

தள்ளிப்போகிறதா தமிழக சட்டப்பேரவை தேர்தல்?

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்,…

மேலும்...

வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

உச்சத்தை தொடும் கொரோனா – தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் பலி!

சென்னை (29 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்‍கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்‍களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்‍கு நேற்று, ஒரே நாளில் 827 பேருக்‍கு…

மேலும்...