கத்தாரில் அவசர சிகிச்சைக்கு உதவும் வகையில் ட்ரோன் சேவை அறிமுகம்!

Share this News:

தோஹா (09 ஜன 2020): அவசரச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் வகையில் ஆளில்லா விமான (ட்ரோன்)  சேவையை கத்தார் நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.

விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு துரிதமாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், ட்ரோன்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். சம்மந்தப் பட்ட இடம், நோயாளி, மற்ற தேவைகள் குறித்து துல்லியமாகப் படம் பிடித்து உடனடியாக ஆம்புலன்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பும்.

இதன்மூலம் நோயாளியின் தன்மையை முன்கூட்டியே அறிந்து ஆம்புலன்ஸுகள் விரைவில் சம்பவ இடங்களுக்குச் செல்ல வசதியாக இருக்கும். கத்தாரிலுள்ள அரசு மருத்துவமனையான “ஹாமத் மெடிக்கல் கார்ப்பரேஷன்” இந்த சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply