அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர். மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது….

மேலும்...

துபாயில் கொரோனாவால் ஒரு மரணம் கூட இல்லாத நாள் இன்று!

துபாய் (03 செப் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் தினமும் ஒருவரையாவது இழந்து கொண்டு இருக்கிறது. இந்நிலைய்ல் கடந்த ஆண்டு நவம்பர் 14 அடுத்து துபாயில் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு கோவிட் மரணம் கூட பதிவாகவில்லை. கடுமையான கோவிட் விதிகள் மற்றும்…

மேலும்...

கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

துபாய் (28 ஆக 2021): துபாயில் கப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றிய நான்கு பேருக்கு தலா 10 லட்சம் வீதம் 40 லட்ச ரூபாய் துபாய் ஆட்சியாளர் மூலம் பரிசாக கிடைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் துபாய் தேரா அல் மாரார் பகுதியில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் கர்ப்பிணிப் பூனை ஒன்று சிக்கித் தவித்தது. எப்படியாவது உயிர் தப்ப போராடிய அந்த பூணையை…

மேலும்...

காலாவதியான துபாய் விசா காலம் நீட்டிப்பு!

துபாய் (12 ஆக 2021): ஐக்கிய அரபு எமிரேட்சீல், வெளிநாட்டவர்களின் காலாவதியான விசா காலம் நவம்பர் 9 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசா காலாவதியாகி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நவம்பர் 9 க்குள் துபாய் திரும்ப வேண்டும் என்று விசா சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல எமிரேட்ஸ் இணையதளத்தில் உள்ளபடி, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் துபாய்க்கு வரலாம். அதேபோல வேலை மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு பொருந்தும் நிபந்தனைகள் சுற்றுலா விசாக்களுக்கும் பொருந்தும் என்று எமிரேட்ஸ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்...

இனி 2 ஜி சேவைக்கு குட் பை!

துபாய் (10 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெமெங்கும் 5 ஜி சேவை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் மாதம் 2 ஜி வசதி கொண்ட தொலைபேசிகளின் விற்பனையை தடை செய்யப்படும் என்றும், டிசம்பர் 2022 இல் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 2 ஜி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு!

துபாய் (08 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) ஐக்கிய அரபு அமீரகத்தில் கோவிட் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 80 சதவிகிதம் பேர் அனுமதிக்கபடுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் 60 சதவீதம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் அதே நேரத்தில், ஒவ்வொரு எமிரேட்டிலும் கட்டுப்பாடுகள் தனித்தனியாக முடிவு செய்யப்படும்.

மேலும்...

இந்திய பயணிகளை ஏற்க ஃப்ளை துபாய் விமான நிறுவனம் மறுப்பு!

துபாய் (06 ஆக 2021): இந்திய பயணிகளை ஏற்க இயலாது என்று ஃப்ளை துபாய் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று தளர்த்தியது. UAE விசா வைத்திருப்பவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு நேற்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கின. அதேவேளை ஃப்ளை துபாய் அல்லாத விமான நிறுவனங்களால் மட்டுமே முன்பதிவுகள் நடைபெறுகின்றன. ஆனால்…

மேலும்...

துபாய் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

துபாய் (04 ஆக 2021): ஹிஜ்ரா (முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “(முஹர்ரம் 1) புத்தாண்டை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பொது விடுமுறையாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பை அனுமதிக்க வேண்டும்.” என்று அமைச்சகம்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவலாம்!

துபாய் (04 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தடை நீக்கம் சவூதி வர காத்திருக்கும் இந்தியர்களுக்கு உதவக்கூடும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து துபாய் வராமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். துபாயின் இந்த அறிவிப்பு சவூதி வரும் இந்தியர்களுக்கு உதவக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே கத்தர் வழியாக வரும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு ஹோட்டல் கிடைக்காததால் பலர் சிக்கித்தவித்துள்ளனர்….

மேலும்...

துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...