இனி 2 ஜி சேவைக்கு குட் பை!

Share this News:

துபாய் (10 ஆக 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகெமெங்கும் 5 ஜி சேவை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜூன் மாதம் 2 ஜி வசதி கொண்ட தொலைபேசிகளின் விற்பனையை தடை செய்யப்படும் என்றும், டிசம்பர் 2022 இல் 2 ஜி சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

2 ஜி நெட்வொர்க் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1994 இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply