ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்தாவது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

அபுதாபி (03 பிப் 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சீனாவின் வுஹானிலிருந்து வந்த சீன நாட்டினை சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதாக ஐக்கிய அரபு அமீரக மருத்துவ துறை அதிகாரி டாக்டர் ஹுசைன் அல் ரான்ட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கனவே நான்கு சீன நாட்டினருக்கு…

மேலும்...

துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

துபாய் (29 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 132 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 6000 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த ஒரெ குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது….

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...