தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்ட வேண்டும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (18 ஆக 2020): ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவை முன்பு வைத்து தீர்ப்பை வரவேற்று ஒரு அமைச்சரவைத் தீர்மானமாகவே வெளியிட வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும். சுற்றுப்புறச்சூழலுக்கும் – தங்களின்…

மேலும்...

அதிமுகவினருக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை (15 ஆக 2020): கட்சி நிர்வாகிகள் யாரும் தனியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அதிமுக தலைமை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின்…

மேலும்...

ஓபிஎஸ்ஸின் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு!

சென்னை (15 ஆக 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இட்டுள்ள ட்விட்டர் பதிவால் அதிமுகவில் மீண்டும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது,. ஆனால் இதுகுறித்து ஓ.பி.எஸ் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார் அதில், “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!!” என்று அந்த ட்விட்டர் பதிவு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ட்விட்டர்…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

எஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி!

திண்டுக்கல் (07 ஆக 2020): எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று முதல்வர் எடப்பாடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எஸ்வி சேகரின் கருத்து குறித்து கேட்டபோது, “எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும்? அவரையெல்லாம்…

மேலும்...

அதிர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் முடிவு – திருமாவளவன் கருத்து!

சென்னை (03 ஆக 2020): மும்மொழிக் கொள்கையை ஏற்காதது குறித்து முடிவெடுத்த தமிழக அமைச்சரவையின் முடிவை வரவேற்றுள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை முடிவெடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக,தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மும்மொழிக்_கொள்கையை ஏற்கமாட்டோம் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதை விசிக சார்பில் வரவேற்றுப் பாராட்டுகிறோம். அதே வேளையில், தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள பிற தீங்குகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில்…

மேலும்...

மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை – தமிழக முதல்வர் திட்டவட்டம்!

சென்னை (03 ஆக 2020): “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமே இல்லை” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில…

மேலும்...

எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின்!

சென்னை (31 ஜுலை 2020): “அதிமுக எம்.ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும்…

மேலும்...

ரேஷன் கடைகளில் நாளை (திங்கள்) முதல் இலவச முகக்கவசம் -முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை (26 ஜூலை 2020): தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில் நாளை முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவு இருந்து வருகிறது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்ககவசம் அணிவது அவசியமாகப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து…

மேலும்...

பிரபல நடிகைக்கு அதிமுகவில் முக்கிய பதவி!

சென்னை (26 ஜூலை 2020): பிரபல நடிகை விந்தியாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த பாப்புலர் வி.முத்தையா, தென்சென்னை வடக்கு மாவட்டம் தியாகராயர் நகரைச் சேர்ந்த நடிகை விந்தியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அதிமுக இளைஞர்…

மேலும்...