ஓபிஎஸ்ஸின் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு!

சென்னை (15 ஆக 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இட்டுள்ள ட்விட்டர் பதிவால் அதிமுகவில் மீண்டும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது.

2021 சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது,. ஆனால் இதுகுறித்து ஓ.பி.எஸ் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார் அதில், “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!!” என்று அந்த ட்விட்டர் பதிவு உள்ளது.

தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ட்விட்டர் பதிவு, வெற்றியை மட்டும் குறிக்கோளாக செயல்படுவோம் மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதை குறிப்பதாகவும், ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொன்று, சசிகலா விரைவில் விடுதலையாக உள்ளதால் அமுமுகவையும், அதிமுகவையும் இணைத்து சசிகலாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் ஓபிஎஸ் விரும்புவதாகவும், இதற்கான ரகசிய தூதே இந்த ட்விட்டர் பதிவு என்பதாகவும் கூறப்படுகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply