மணமக்களை வித்தியாசமாக வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): சென்னையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மணமக்கள் பெரியார் போல் வாழ்க என வாழ்த்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜாவின் இல்லத் திருமண விழா சென்னை கோபாலபுரம் அருகே உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அபோது பேசிய ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள…

மேலும்...

13 வருடங்கள் என்ன செய்தீர்கள்? – ஸ்டாலினுக்கு எடப்பாடிகேள்வி!

சென்னை (26 ஜன 2020): 13 வருடங்கள் மத்தியில் இருந்து தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். மொழிப் போர் தியாகிகளுக்கான நினைவுப் பொதுக்கூட்டம் சென்னையில் அதிமுக சார்பாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது- அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு பாஜகவின் அடிமை அரசு என்று செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருகிறார். அப்படியல்ல….

மேலும்...

சசிகலாவுக்கு அதிமுக அமைச்சர் திடீர் ஆதரவு – டென்ஷனில் எடப்பாடி!

ஸ்ரீவில்லிபுத்தூர் (25 ஜன 2020): சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்று அதிமுகவின் பால்வளத்துறை ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்தால், அதிமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு போட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதால்,…

மேலும்...

தமிழகம் முழுவதும் இன்று போலியோ தடுப்பு முகாம்!

சென்னை (19 ஜன 2020): போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 70.50 லட்சம் குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்குவதற்காக, சுகாதாரத் துறை, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன்…

மேலும்...

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி குடும்பத்துக்கு ரூ 1 கோடி – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (10 ஜன 2020): கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு சோதனை சாவடியில் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்களால் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது….

மேலும்...

தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக…

மேலும்...

நெல்லை கண்ணன் கைது குறித்து முதல்வர் விளக்கம்!

சென்னை (07 ஜன 2020): நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலப்பாளையத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ….

மேலும்...