இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுகிறேன் – ஒமர் காலித் நீதிமன்றத்தில் விளக்கம்!

புதுடெல்லி (22 அக் 2020): திகார் சிறையில் தனிமையில் கொடுமைப் படுத்தப்படுவதாக ஜே.என்.யூ முன்னாள் மாணவர் ஒமர் காலித் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஒமர் காலித் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதியிடம் அளித்த விளக்கத்தில், உமர் காலித் தனது…

மேலும்...

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. . நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்….

மேலும்...

இந்திய சீன எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு!

புதுடெல்லி (13 அக் 2020): இந்திய சீன எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. பாங்கோங் த்சோ ஏரியின் கரையிலிருந்தும், லடாக்கில் உள்ள பிற மோதல் பகுதிகளில் இருந்தும்  சீன படைகள் திரும்ப பெற வலியுறத்தபட்டது. உயர்மட்ட இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளின்  இந்த சந்திப்பு 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கிழக்கு லடாக்கில் எல்.ஐ.சியின்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது!

புதுடெல்லி (16 செப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி, 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி (கோவாக்சின்) சோதனையில் முன்னேற்றம்!

புதுடெல்லி (12 செப் 2020): கொரோனாவிற்கான தடுப்பூசியில் இந்தியாவின் கண்டுபிடிப்பான (கோவாக்சின்) சோதனை முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜூலை மாதம் 23-ஆம் தேதி இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சென்னை காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் நடத்திய சோதனையில் தடுப்பூசி…

மேலும்...

அமெரிக்காவை விஞ்சிவிடும் நிலையில் இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தொட்டுவிடும் நிலையில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது உலகளவில் கொரோனாவால் சுமார் 2 கோடியே 70 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா? – அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (06 செப் 2020): கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளன. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 90,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எண்ணிக்கை 41,10,839 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் கொரோனா மரணங்கள் 70 ஆயிரத்தை கடந்துள்ளது.. ஒரே நாளில் 923 பேர் கொரோனாவுக்கு…

மேலும்...

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு!

புதுடெல்லி (31 ஆக 2020): இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில்,…

மேலும்...