இந்தியாவில் அதிகரிக்கும் புற்று நோய் – ஐ.சி.எம்.ஆர். அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (19 ஆக 2020): இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 10 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுளாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் மற்றும் நோய்கள் தொடர்பான தகவல் திரட்டும் தேசிய மையம் இணைந்து நடத்திய ஆய்வில் 2020ம் ஆண்டில் 13.9 லட்சம் நபர்கள் புற்றுநோய் தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும் இது 2025ம் ஆண்டில் 15.7 லட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

பொருளாதாரம் கோமாவில் உள்ளது – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சாடல்!

புதுடெல்லி (24 ஜூலை 2020): நமது பொருளாதாரம் கோமா நிலையில் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் சிங்கப்பூரை சார்ந்த டிபிஎஸ் வங்கி நடத்திய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு ரகுராம் ராஜன் உரையாற்றுகையில் தெரிவித்த கருத்துக்கள் : ஆர்பிஐ நாட்டின் வங்கிகளிடமிருந்து ரிவர்ஸ் ரிபோ விகிதத்தில் தொகையினை வாங்கி மத்திய அரசுக்கு கடனாக வழங்கி வருகிறது. இதனால் வங்கிகளுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும். நிதிப்பற்றாக்குறையை அதிகப் பணப் புழக்கம் கொண்டு சமாளிக்கலாம் என…

மேலும்...

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று – ஒரே நாளில் 45,720 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (23 ஜூலை 2020): இந்தியாவில் கொரோனா தொற்றால் உச்சபட்சமாக ஒரே நாளில் 45,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 12 லட்சத்தை கடந்து, 12,38,635 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் அதிகபாதிப்பு பதிவாகியுள்ள 5 மாநிலங்களின் பட்டியிலில், மகாராஷ்டிரா (10,576), ஆந்திர பிரதேசம் (6,045), தமிழகம் (5,849), கர்நாடகா (4,764) உத்தர பிரேதசம் (2,300) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில்…

மேலும்...
CORONA-India

ஒரு மில்லியனைத் தொட்டது, கொரோனா பாதிப்பு:..!

தில்லி (17 ஜூலை 2020):இன்று வெள்ளிக்கிழமை, இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்ப்பட்டடோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தொட்டதாக இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக்கணக்கு தெரியப்படுத்துகின்றது. கொரோனா பாதிப்பு ஆரம்பித்து, முதல் நான்கு மாதங்களில் அரை மில்லியன் அளவைத் தொட்டிருந்த இந்த பாதிப்பு, அடுத்த அரை மில்லியன் கணக்கைத் தொடுவதற்கு எடுத்துக் கொண்ட காலம் வெறும் மூன்றே வாரங்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெயிளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 30 அன்று இந்தியாவில்…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (15 ஜூலை 2020): இந்தியாவில் ஒரே நாளில் 29,429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவில் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 582 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...

இந்தியாவில் 75000 கோடி முதலீடு – சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (13 ஜூலை 2020): இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றத்திற்காக 75,000 கோடி கூகுள் நிறுவனம் முதலீடு செய்யும் என அதன் செயல் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்த முதலீடு ஐந்து முதல் ஏழு வருடங்களில் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். முதலாவதாக ஒவ்வொருவரும் தத்தமது தாய் மொழிகளிலேயே வலைதளங்களை அணுகுவதான வசதி இரண்டாவதாக, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் மூன்றாவதாக, வணிகத் துறைகளில் அவற்றின் டிஜிட்டல்…

மேலும்...

ஒரே நாளில் அதிக உச்சத்தை தொட்டது, கொரோனா- பாதிப்பு!

புதுடெல்லி (11 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து இந்தியாவில் முதன் முறையாக ஒரே நாளில் மிக அதிகபட்சமாக 27,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையும் சேர்த்து மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தைத் தாண்டிவிட்டது. அதேபோல் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,123 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை5,5,15,386 ஆகவும் உயர்ந்திருப்பதாக சனிக்கிழமை அன்று மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது. மேலும் கொரோனா சார்ந்த மரணங்களில் 70% ஏனைய நோய்களுடன் இணைந்த பாதிப்பில் நிகழ்ந்ததாகவும் அமைச்சகம்…

மேலும்...

கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாமிடத்தில் இந்தியா!

புதுடெல்லி (06 ஜூலை 2020): கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு மாநிலங்களும் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று மட்டும் அதிகபட்சமாக ஏறக்குறைய 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது…

மேலும்...

முன்னரே வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் – ஆம்புலன்ஸ் தாமதத்தால் உயிரிழந்த முதியவர்!

பெங்களுரு (06 ஜூலை 2020): பெங்களுரில் ஆம்புலன்ஸ் பல மணிநேரங்கள் தாமதமாக வந்ததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.அவருக்கு கொரோனா உறுதியானதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலையிலிருந்து குடும்பத்தினர் முயற்சித்தும் ஆம்புலன்ஸ் வராமல் மாலை 7 மணிக்கு வந்துள்ளது. அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்ல சில தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்…

மேலும்...

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா?

ஐதராபாத் (05 ஜூலை 2020): இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்தை (கோவாக்சின்) கண்டுபிடித்த கிருஷ்ணா எல்லா என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. இவர் ஒரு தமிழர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவராகும். இவரது பாரத் பயோடெக்’ நிறுவனம் உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும், ‘கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து,…

மேலும்...