குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மீண்டும் வெடித்த போராட்டம்!

Share this News:

அஸ்ஸாம் (22 அக் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை அடுத்து அசாமில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து அசாம் மாணவர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. .

நாடே கொந்தளித்தபோதும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது கோவிட் தான் என்றும், இந்தச் சட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் மாணவர்கள் ஜே .பி. உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோர்ஹாட்டில் உள்ள துணை ஆணையர் அலுவலகம் முன் மாணவர்கள் கூடினர். அவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அசாமியின் அடையாளத்தை அழிக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அசாம் பூர்வீக மக்களுக்கு சொந்தமானது. வெளியாட்களுக்கு அல்ல. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத வெளிநாட்டினரை அழைத்து வருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிதான் இந்த சட்டம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். வெளிநாட்டினரோ இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ யாராக இருந்தாலும் இங்கு அனுமதிக்க முடியாது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply