ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை ரீ ட்விட் செய்து தன்னுடைய கருத்தை பதிவிட்டிருந்த அமைச்சர்…

மேலும்...

ஐபிஎல் டிவிஸ்ட் – நேரலையில் கோபத்தில் வெளியேறிய இர்பான் பதான்!

மும்பை (03 ஏப் 2022): ஐபிஎல் 15ஆவது சீசன் புதுபுது ட்விஸ்ட்களை கொடுத்து வரும் நிலையில், நேரலையில் ரெய்னாவுடன் கோபித்துக்கொண்டு இர்பான் பதான் வெளியேறிய வீடியோ ஒன்றி வைரலாகி வருகிறது. ஐபிஎல் 15ஆவது சீசனில் சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் விளையாடவில்லை. எனினும் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரெய்னாவை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஹிந்தியில் வர்ணனை செய்து வருகிறார். மேலும் போட்டி முடிந்தப் பிறகு போட்டியில் நடந்த விஷயங்கள் குறித்தும் அவ்வபோது பேசி வருகிறார்….

மேலும்...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அசருத்தீன் சச்சின்!

பெங்களூரு (18 பிப் 2021): பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேரள இளம் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு கேரள வீரர் சச்சின் பேபியும் பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார. சையத் முஷ்டாக் அலி டிராபியில் சிறந்து விளங்கிய முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்தது ஐபிஎல் போட்டியில் தேர்வாவதவதற்கு வழிவகுத்தது. வரும் ஐபிஎல் போட்டிக்கு ரூ .16.25 கோடிக்கு கிறிஸ் மோரிஸ் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

மேலும்...

ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது. தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள்…

மேலும்...

ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

துபாய் (28 ஆக 2020): ஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர் ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக எட்டு ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் இருந்து கிளம்பி துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் துபாயில் ஒரு ஹோட்டலில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

மேலும்...

கொரோனா எதிரொலி – இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக இந்தியா- தென்னாப்ரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா அச்சம் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகள், மால்கள், தியேட்டர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியா- தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல்…

மேலும்...

அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் – கங்குலி திட்டவட்டம்!

கொல்கத்தா (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இந்தியாவில் பிரபலமான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி தொடங்கி மே 24-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பெரும்பாலான அணிகளுக்கு அயல்நாட்டு பயிற்சியாளர்களே உள்ளனர்….

மேலும்...