ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

Share this News:

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட்டின் சூழலின் காரணமாக, உச்சக் குழுவின் அறிவுறுத்தல்களின்படி தொழிலாளர்கள் திரும்புவதற்கான திட்டத்தின் காலம் நீட்டிக்கப்பட்டது.

இதுவரை வெளிநாட்டுக்கு திரும்பி செல்ல மொத்தம் 57,748 வெளிநாட்டினர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 12,378 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்கு ஏற்கனவே திரும்பி சென்றுள்ளதாக ஓமான் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply