முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழச்சி தங்கபாண்டியன், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள மஸ்கட்டில் அமைந்துள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதிக்குச் சென்று இஸ்லாமிய உடையில் புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி…

மேலும்...

ஒமான் சுல்தான் 121 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை!

மஸ்கட் (13 ஜன 2023): ஓமானில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற 121 கைதிகளை சுல்தான் ஹைதம் பின் தாரிக் விடுதலை செய்தார். அவர் பதவியேற்ற மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 57 பேர் வெளிநாட்டினர். கடந்த ஆண்டு 229 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஜனவரி 11, 2020 அன்று, சுல்தான் கபூஸின் வாரிசாக சுல்தான் ஹைதம் பின் தாரிக் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், ஓமன் நாட்டின்…

மேலும்...

ஒமானில் சட்டவிரோத தபால் சேவைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

மஸ்கட் (13 செப் 2022): ஓமானில் சட்டவிரோத அஞ்சல் சேவைகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதுபோன்ற தபால் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடிதங்கள், சிறிய தொகுப்புகள் மற்றும் பார்சல்கள் போன்ற அனைத்து பொருட்களையும் பெறுதல், வரிசைப்படுத்துதல் மற்றும் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும். உரிமம் பெற்ற…

மேலும்...

இந்தியாவுக்கான விமான தடையை நீக்கியது ஓமான்!

மஸ்கட் (24 ஆக 2021): இந்தியாவுக்கான விமான தடையை ஓமான் அரசு நீக்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஓமான் தடை விதித்திருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஓமான் அரசு விதித்திருந்த விமானம் மற்றும் தரை கப்பல் போக்குவரத்து தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஓமான் அரசு அங்கிகரித்துள்ள Oxford AstraZeneca, Pfizer, Sputnik மற்றும் Synovac கோவிட் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் ஓமானுக்கு வரலாம். அதேவேளை இரண்டாவது…

மேலும்...

ஓமானில் தண்டனை இல்லாமல் நாடுகளுக்கு திரும்பி செல்ல கால அளவு நீட்டிப்பு!

மஸ்கட் (06 ஜன 2021): போதுமான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், அமுறையான ஆவணங்கள் இல்லாமல் ஓமானில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களை ஆபராதம் அல்லது தண்டனை இல்லாமல் திருப்பி அனுப்பும் திட்டம் டிசம்பர் 31 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஓமானிய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது….

மேலும்...

சவூதி அரேபியாவைத் தொடர்ந்து குவைத் ஓமான் நாடுகளிலும் சர்வதேச விமானங்களுக்கு தடை!

மஸ்கட் (21 டிச 2020): சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான் மற்றும் குவைத் நாடுகளும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளன. இங்கிலாந்தில் காணப்படும் புதிய கோவிட் வைரஸ் படு வேகமாகப் பரவி வருவதால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. சவூதி அரேபியா ஒரு வாரத்திற்கு தனது எல்லைகளை மூடியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஓமான், குவைத் நாடுகளிலும் சர்வதேச விமானங்களை இன்று முதல் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...

ஓமனிலிருந்து தமிழகத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்!

சென்னை (07 மார்ச் 2020): ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து துவங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், பல்வேறு நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்த அளவில் இந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது நேற்றைய நிலவரப்படி 31 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தைப் பொருத்தவரை யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அரசு கூறியிருந்தது. எனினும் எச்சரிக்கையாகவே அரசு உள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டில்…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...