25 நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் துவங்கும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்!

Share this News:

ரியாத் (03 செப் 2020) சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் மூலம் தனது விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகளுக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது,

25 நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு சவூதி அரேபியன் விமான நிறுவனம் பயணிகளுக்கு உத்தரவு பிறப்பித்ட்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமான், பஹ்ரைன், எகிப்து, லெபனான், மொராக்கோ, துனிசியா, சீனா, யுனைடெட் கிங்டம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, துருக்கி, கிரீஸ், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, சூடான், எத்தியோப்பியா, கென்யா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா. ஆகிய நாடுகளிலிருந்து சவூதி திரும்புபவர்களுக்கு மட்டும் முதல்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சவூதி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி வழங்கப்படும் படிவத்தை நிரப்பி கையொப்பமிட்டு. இந்த படிவத்தை விமான நிலைய சுகாதார கட்டுப்பாட்டு மையத்தில் வந்தவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து பயணிகளும் ஏழு நாட்களுக்கு வீட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் அனைத்து பயணிகளும் தட்மேன் மற்றும் தவக்கல்னா ஆகிய இரண்டு ஆப்களை தங்கள் மொபைல்களில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.,மேலும் அதில் குறிப்பிடப்பட்டவைகளை பின்பற்ற வேண்டும்,.


Share this News:

Leave a Reply