புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

Share this News:

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இரு பெரிய மசூதிகளுக்கு வருபவர்களுக்கு தனிப்பட்ட சிறப்பு இஃப்தார் உணவை தனித்தனியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல ஸஹர் உணவும் தனித்தனியாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப் படுவதாகவும் அவர் கூறினார். அதேவேளை குழுவாக இருந்து உணவு உண்ணுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று பரவுவதை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வது, சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகமூடியை அணிந்துகொள்வது அவசியம் ” என்று அவர் கூறினார். .

மேலும் புனித மக்கா பெரிய மசூதியின் கிழக்கு பகுதி அஜ்யாத் பாலம் மற்றும் கிங் ஃபஹத் கேட் முன் தொழுகை மற்றும் உம்ரா ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஷேக் அல்-சுதாய்ஸ் கூறினார்.


Share this News:

Leave a Reply