ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம், நபிகள் நாயகத்தின் மசூதியில் தொழுவதற்கு, எந்த அனுமதியும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ரமலானில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ரமலான் 1 முதல் 19 வரையிலான நாட்களில், அதிகாலை 2.30 முதல் சுப்ஹு தொழுகை வரையிலும், முற்பகல் 11.30 முதல்…

மேலும்...

மத்திய பிரதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஊரடங்கு உத்தரவு!

கார்கோன் (01 மே 2022): ரம்ஜான் பண்டிகை மற்றும் இந்து திருவிழாக்களையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது “ஈத் தொழுகை வீட்டில் செய்யப்பட வேண்டும். மேலும், அட்சய திரிதியா மற்றும் பரசுராமர் ஜெயந்தியில் எந்த நிகழ்ச்சியும் மாவட்டத்தில் ஏற்பாடு செய்ய அனுமதிக்கப்படாது, ”என்று கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (கார்கோன்) சுமர் சிங் முஜல்தா கூறினார். கடந்த ஏப்ரல் 10…

மேலும்...

ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் முக்கிய உணவு கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை!

குவைத் (10 மார்ச் 2022): ரம்ஜானை முன்னிட்டு குவைத்தில் உள்ள முக்கிய உணவுச் சந்தையான முபாரக் சந்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ரம்ஜான் மாதத்தில் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சகம் முன்பு தெரிவித்திருந்தது. இதன் ஒரு கட்டமாக குவைத்தின் பாரம்பரிய வர்த்தக மையமான முபாரக் சந்தையை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு வந்த அதிகாரிகள் குழு இறைச்சிக் கடைகளை ஆய்வு செய்து, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிக விலை…

மேலும்...

புனித ரமலானில் மக்கா மற்றும் மதினா பெரிய மசூதிகளில் விதிக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகள்!

ஜித்தா (29 மார்ச் 2021): உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்வதால் இவ்வருட ரமலானில் புனித மக்கா மற்றும் மதினாவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இரண்டு புனித மசூதிகளின் தலைமை இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாய்ஸ் ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இப்தார் (நோன்பு திறப்புக்காக) விரிப்பு விரித்து ஒன்றாக நோன்பு திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. , இஃதிகாஃப் (வழிபாட்டுக்காக ஒரு மசூதியில் தங்கியிருக்கும் நடைமுறை) இரு மசூதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு…

மேலும்...

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீனின் பெருநாள் வாழ்த்து!

ஐதராபாத் (26 மே 2020): முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் தனது ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப் பட்டது. கொரோனா பரவலை தடுக்க நான்காவது கட்ட லாக்டவுன் அமலில் இருப்பதால் ரம்ஜான் நோன்பு காலங்களிலேயே முஸ்லிம்கள் தொழுகையை வீட்டிலேயே தொழுது கொண்டனர். இந்நிலையில் நேற்றைய பெருநாள் கொண்டாட்டமும் வீடுகளிலேயே கொண்டாடப் பட்டது. மேலும் பெருநாள் தொழுகையையும் வீட்டிலேயே தொழுது கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல…

மேலும்...

நடிகை அதுல்யா ரவியின் புதிய தோற்றம்! (புகைப்படம் இணைப்பு)

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வித்தியாசமான முறையில் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல நடிகை அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும்...

கேரளாவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு தளர்வு!

திருவனந்தபுரம் (23 மே 2020): ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் மற்ற நாட்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்க ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் ரம்ஜான் பண்டிகை அறிவிக்கப் பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் வகையில் சனிக்கிழமை இரவு 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப் படுகிறது. அதேபோல ரம்ஜான் பண்டிகை தினமான ஞாயிற்றுக் கிழமை மட்டும்…

மேலும்...

புத்தாடை இல்லா ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் முடிவு!

ஐதராபாத் (22 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் முஸ்லிம்கள் புத்தாடை அணியாமல் இவ்வருட ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். ரம்ஜான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக அளவிலான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகமெங்கும் ரம்ஜான் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது. இது இப்படியிருக்க இந்தியாவில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கு ம் தெலுங்கானா மாநிலத்தில் இவ்வருடம் புத்தாடை அணியாமல் வீட்டிலேயே தொழுகை நடத்தி ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர். எனினும்…

மேலும்...

ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரமலான் உணவு மற்றும் கொரோனா பேரிடர் உதவி!

தஞ்சாவூர் (10 மே 2020): தமிழகத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வாடும் மக்களுக்கு ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரூ 18 லட்சம் மதிப்பிலான கொரோனா பேரிடர் மற்ரும் ரமலான் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். சவூதி அரேபியா ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றம் தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்களான தஞ்சை அனைத்து லயன்ஸ் சங்கங்கள், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், அமீரகத் தமிழர்கள் மறுமலர்ச்சிப் பேரவை – அமீரகம், ஏ.எம்.சி…

மேலும்...

அமெரிக்க நகரங்களில் ஒலிக்கும் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

வாஷிங்டன் (26 ஏப் 2020): அமெரிக்காவில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) பல இடங்களில் ஒலிக்கிறது. அமெரிக்காவில் ஒலிப்பெருக்கி மூலம் பாங்கு சொல்ல பல இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இவ்வருட புனித ரமலான் மாதத்திற்காக அக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரின் மேயர் ஜேக்கப் பிரே, நகரின் அனைத்து பகுதிகளிலும் ரமலான் மாதத்தின் அனைத்து தினங்களிலும் ஐந்து வேளைக்கும் ஒலிப் பெருக்கி மூலம் பாங்கு அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனாவால் அதிக…

மேலும்...