சவூதி அரேபியாவில் கொரோனா காரணமாக இந்தியாவின் 6 மாத கர்ப்பிணிப் பெண் மரணம்!

Share this News:

கத்தீப் (31 ஜுலை 2021): சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவை சேர்ந்த 6 மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி காதா(வயது-27) ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் தாமாம் அருகிலுள்ள கத்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காதாவின் உடல்நிலை மோசமடைந்ததால், குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். எனினும் காதா உயிரிழந்தார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் வெளியே எடுக்கப்பட்ட குழந்தையும் உயிரிழந்தது.. விசிட் விசாவில் கடந்த சில மதங்களுக்கு முன்பு சவுதிக்கு வந்த அவர் கணவருடன் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பத் தயாரான நிலையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.


Share this News:

Leave a Reply