55 ரியால்களுக்கு விமான டிக்கெட் – சவூதி அரேபிய விமான நிறுவனம் வழங்கும் ஆஃபர்!

Share this News:

ரியாத் (25 ஜன 2023): சவூதியின் பட்ஜெட் விமான நிறுவனமான ஃப்ளை அடீல், சவுதி அரேபியாவில் வெறும் 55 ரியால்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது.

மதீனா உட்பட சவுதிக்குள் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் உள்ள விமான நிறுவனங்களுக்கு இந்த சலுகை பயனுல்லதாக இருக்கும்.

சவுதி அரேபியாவின் சுற்றுலா மையங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் Fly Adeel சலுகைகளை வழங்குகிறது. இந்த டிக்கெட் விலையில் 7 கிலோ ஹேண்ட் பேக் அடங்கும். இருக்கைகள் முழுமையாக முன்பதிவு செய்யப்படும் வரை சலுகை டிக்கெட்டுகள் தொடரும். ஜனவரி 23 முதல் உள்நாட்டு பயணங்களுக்கு இந்த கட்டணத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

டிக்கெட்டுகளை விமான நிறுவனத்தின் இணையதளமான https://flights.flyadeal.com/ar அல்லது Flyadeal ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

ஃப்ளை அடீல் சவுதி அரேபியாவிற்குள்ளும் வெளியேயும் 27 மையங்களுக்கு சேவைகளை இயக்குகிறது. ரியாத், ஜித்தா மற்றும் தம்மாம் தவிர, பிஷா, அல்பாஹா, நஜ்ரான், குரியாத், அல்-ஜூஃப், ஜசான், தபூக் மற்றும் ஹைல் ஆகிய இடங்களுக்கும் சலுகை விலையில் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.


Share this News:

Leave a Reply