பாஜக தரப்பில் குறையுள்ளது – யோகி ஆதித்யநாத் பகீர் கருத்து!

Share this News:

லக்னோ (19 நவ 2021): பாஜக தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக வேளாண் சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம். என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை அடுத்து. இந்த முடிவை வரவேற்றுள்ளஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வேளாண் சட்டத்தின் பலன்களை விவசாயிகள் நம்பவில்லை. “விவசாயிகளுடன் அனைத்து மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளோம். ஆனால் எங்கள் தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம்.

அதேவேளை விதிகளை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை நான் வரவேற்கிறேன்” என்று யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply