அடித்துச் செல்லப்பட்ட பேருந்து – 12 பேர் பலி!

Share this News:

விசாகப்பட்டினம் (20 நவ 2021): ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பேருந்து அடித்த்ச் செல்லப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. கடப்பா மாவட்டத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் 10 பேர் மீட்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நந்தலூரில் பேருந்தில் இருந்து 3 பேரும், குண்டலூரில் இருந்து 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். ND மற்றும் RF குழுக்கள் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நெல்லூர், சித்தூர், கடப்பா மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியை அரசு மேற்பார்வையிட்டு வருவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ஆந்திர முதல்வர் நாளை சென்று பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுகிறார்.


Share this News:

Leave a Reply