ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

Share this News:

லக்னோ (13 ஏப் 2020): நாட்டில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் பெண் தொழிலாளி ஒருவர் தனது ஐந்து குழந்தைகளை கங்கை நதியில் வீசி எறிந்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் படோஹியில் உள்ள ஜஹாங்கிராபாத் எனும் ஊரைச் சேர்ந்த தம்பதிகள் மிரிதுல் யாதவ் – மஞ்சு ஆகியோர். இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, மாதேஸ்வரி, ஷிவ்சங்கர், கேஷவ் பிரசாத் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். தினக்கூலிகளான இவர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைகளுக்கும் தங்களுக்கும் உணவில்லாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மனைவிக்கு கணவனுடனும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தனது குழந்தைகளை கங்கை ஆற்றில் வீசியுள்ளார். இதுபற்றி அறிந்த போலிஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் இப்போது திடமான மனநிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply