பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

Share this News:

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது.

PFI மற்றும் தொடர்புடைய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. யுஏபிஏ பிரிவு 3ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. .

கேம்பஸ் ஃப்ரண்ட், ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மற்றும் ஜூனியர் ஃப்ரண்ட் போன்ற இணைப்பு அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

உ.பி., கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கொலைகளும் தடைக்கு ஒரு காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐஎஸ் மற்றும் ஜமாத் உல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் PFIக்கு தொடர்பு இருப்பதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த வியாழன் அன்று, நாடு முழுவதும் உள்ள PFI மையங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் NIA மற்றும் ED ஒரு பெரிய சோதனை நடத்தியது. 15 மாநிலங்களில் சோதனை நடந்தது. சோதனைக்குப் பிறகு, தேசிய தலைவர்கள் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை அடுத்து எட்டு மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மையங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் 78 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி, அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ என்ற பெயரில் நடந்த இந்த சோதனையில், அந்தந்த மாநில போலீசார் சோதனை நடத்தினர். கர்நாடகாவில் 45 பேரும், மகாராஷ்டிராவில் 12 பேரும், அசாமில் 21 பேரும், டெல்லியில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமில் உள்ள நகர்பெராவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பணம் அளித்து, ஆயுதப் பயிற்சி அளித்து, தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை அச்சுறுத்தியதாக என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். பாப்புலர் ஃப்ரண்டிற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் நேற்று அறிவித்தார்.

அதேநேரம், நேற்றைய சோதனையின் போது கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பாட்டாளர்களை டெல்லி போலீசார் என்ஐஏவிடம் ஒப்படைக்கவுள்ளனர். என்ஐஏ அளித்த தகவலின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து டெல்லியில் உள்ள பிஎஃப்ஐ மையங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

நேற்று SDPI டெல்லி மாநில துணைத் தலைவர் ஷாஹின் கவுசரை போலீசார் கைது செய்தனர், ஷஹீன் பாக் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்பான கூடுதல் தகவல்களை போலீசார் திரட்டி வருவதால் வரும் நாட்களில் விசாரணை தொடரலாம்.

இதற்கிடையில், பாப்புலர் ஃப்ரண்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் விசாரணைக் குழுவால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply