அறிவிக்கப்படாத அவசர நிலை – எஸ்டிபிஐ அறிக்கை!

Share this News:

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் என்று SDPI தெரிவித்துள்ளது.

இதுகுறித்து SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், சங்கச் சுதந்திரம் அரசால் நசுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் சாசன விழுமியங்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க பாஜக தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் SDPI கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே நேரத்தில் SDPI கட்சியையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சி என்பதால் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு நிலைப்பாட்டை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply