காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

158

ஜம்மு (22 பிப் 2020): ஜம்மு காஷ்மீரின் பிஜ்பேஹரா அருகே சங்கம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை.

ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமரின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் பரிதவித்த 14 பெண்கள் - துரிதமாக மீட்ட பிணராயி விஜயன்!

இருதரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.