டெல்லி போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாய அமைப்புகள் அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (27 ஜன 2021): டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திலிருந்து விலகுவதாக இரண்டு விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யு) அறிவித்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் குழுவின் தலைவர் வி.எம்.சிங், கூறுகையில், போராட்டமுறைக்கு உடன்பட முடியாததால் போராட்டத்திலிருந்து விலகுவதாகக் கூறினார்.

“நாங்கள் இந்த போராட்டத்திலிருந்து விலகினாலும், விவசாயிகளின் உரிமைகளுக்கான எங்கள் போராட்டம் தொடரும்” என்று அவர் மேலும் கூறினார். குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைகளில் தனது அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறையால் தாம் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக இந்திய கிசான் ஒன்றியத்தின் தலைவர் தாக்கூர் பானு பிரதாப் சிங் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply