அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கு புகைப்படம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக மாற்றப்பட்டது என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேபோன்ற சம்பவத்தில், ட்விட்டர் முன்பு பிசிசிஐயின் ட்விட்டர் கணக்கிலிருந்து ஒரு படத்தை அகற்றியது. இது பதிப்புரிமை மீறலைக் குறிப்பதாக ட்விட்டர் தெரிவித்தது. அதேப்போல. அமெரிக்கத் தேர்தலின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட் செய்ததையும் ட்விட்டர் நீக்கியது குறிப்பிடத்தக்கது..

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply