அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர்…

மேலும்...

பாகிஸ்தான் ரெயில் படத்தை பயன்படுத்தி அசிங்கப்பட்ட குஜராத்!

அஹமதாபாத் (03 மார்ச் 2020): ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த செயலி (APP) ஐ அறிமுகப்படுத்திய குஜராத் ரெயில்வே காவல்துறை அந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்பட்டுள்ளது. ”Surakshit Safar” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டதோடு அதனை பலருக்கு பகிரவும் செய்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்சி அடைந்து, சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து குஜராத் ரெயில்வே போலீஸ் அந்த படத்தை நீக்கியுள்ளது. இந்த…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்த பரபரப்பு படத்தை வெளியிட்ட சீனா!

பீஜிங் (28 ஜன 2020): சீனாவில் பரவி வரும் வைரஸ் நோய் குறித்த பரபரப்பு படத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் 81 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் சுமார் 2800 பேர் வரை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் உள்ள மக்களிடையே இந்த வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸைத் தடுப்பது…

மேலும்...

காஷ்மீர் முன்னாள் முதல்வரின் தற்போதைய நிலை – ஸ்டாலின் கவலை!

சென்னை (28 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் மிகுந்த வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்டு வருத்தம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய…

மேலும்...

ஐந்து மாதங்களுக்குப் பின் வெளியான ஒமர் அப்துல்லாவின் வைரல் புகைப்படம்!

ஜம்மு (25 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு…

மேலும்...