தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

Share this News:

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல் பட்டீலை மீட்டனர்.

ராகுலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில் ஒருமணி நேரம் தாமதமாக சென்றபோதும், பயணியை மீட்க மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Share this News:

Leave a Reply