கொரோனாவை காட்டி தேர்தல் அறிக்கை – பாஜகவின் சித்து விளையாட்டு!

Share this News:

பாட்னா (22 அக் 2020): பிகாரில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

சமீபத்திய பாஜக மீதான பொதுமக்களின் அதிருப்தியால் பாஜக நிதிஷ் கூட்டணி படுதோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் “பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் உள்ளது.


Share this News:

Leave a Reply