ஹலோ சோனு நிகாம் துபாயில் பாங்கோசை கேட்குதா? – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Share this News:

துபாய் (22 ஏப் 2020): இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்வாவினரின் செயல்பாடுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

2014ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், படுகொலைகள் என எல்லாம், தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கொரோனாவை மறந்து பலரும் இதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

போதாதற்கு இந்துத்வா ஆதரவு சினிமா கலைஞர்கள், தலைவர்கள் முதல் சாதாரண இந்துத்வா பதிவாளர்கள் வரையிலான ட்விட்டர் பதிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்துத்வாவிற்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டி அரபியர்களும் களமிறங்கிவிட்டனர். வளைகுடாவில் இருக்கும் சங்பரிவார் அமைப்பு ஆதரவாளர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் அரபியர்கள் இறங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான விவகாரத்தை எடுத்துச் செல்ல அரேபியர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி பாடகர் சோனு நிகாம் கடந்த 2017 ஆம் ஆண்டு மசூதிகளில் ஒலிக்கப்படும் பாங்கோசைக்கு எதிராக பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டதால் ட்விட்டர் கணக்கையே மூடிவிட்டு சென்றுவிட்டார்.

தற்போது சோனு நிகாம் துபாயில் வசித்து வருகிறார். கொரோனா காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்தியா வரமுடியாத நிலை. இந்நிலையில் அப்போது இட்ட பாங்கோசைக்கு எதிரான பதிவு இப்போது தோண்டி எடுக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அரபியர்களால் சோனுநிகாமின் பதிவுகள் தற்போது விமர்சிக்கப்பட்டும் வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் ‘இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதிகளில் பாங்கோசை கேட்குமே சோனு நிகாம் என்ன செய்கிறார்?’ என்றெல்லாம் நெட்டிசன்களால் கடுமையாக கேள்விகளால் துளைக்கப்பட்டு வருகிறார்.

முஸ்லிம் எதிர்ப்பு பதிவுகள் காரணமாகவும், மத உணர்வை சீர்குலைக்கும் விதமாகவும் பதிவிடும் பலரும் வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply