முஸ்லிம்களுக்கு மசூதி எழுப்பும் இந்துக்களும், சீக்கியர்களும் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

மோகா (16 ஜூன் 2021): பஞ்சாபில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்து முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அடிக்கல் நாட்டினர்.

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றிணைந்து அங்கு வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்காக மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.

ஞாயிற்றுக்கிழமை காலை இதற்காக நடந்த நிகழ்ச்சியில் அணைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முஸ்லிம்கள் நினைத்தனர். ஆனால் இந்துக்களும்,சீக்கியர்களும் குருத்வாராவின் வாயில்களைத் திறந்து அங்கு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்நகிழ்ச்சி குறித்து தெரிவித்த சர்பஞ்ச் பாலா சிங் (45) என்பவர், இங்கு “இங்கு நான்கு முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. 1947 இல் பிரிவினைக்கு முன்னர் ஒரு மசூதி இருந்தது, ஆனால் அதன் அமைப்பு காலப்போக்கில் இடிந்து விட்டது., இங்கு இந்து, முஸ்லீம் மற்றும் சீக்கிய குடும்பங்கள் இணக்கமாக வாழ்கின்றன. எவ்வாறாயினும், முஸ்லீம் குடும்பங்களுக்கும் தங்களின் வழிபாட்டுத் தலம் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்பினோம், எனவே முன்பு மசூதி இருந்த நிலத்தில் மீண்டும் ஒரு மசூதி கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன., ”என்று கூறினார்

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply