மோடி அரசு மீது சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (07 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு 100 நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிவசேனா சாடியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது. இந்த தொற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், 2021 வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்.

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது கவலை அளிக்கிறது.” என்று சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்: