கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை – 50 பேர் கைது!

Share this News:

ஆலப்புழா (19 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது விவகாரத்தில் இரு கொலை தொடர்பிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் ஆலப்புழாவில் நேற்று இரவு எஸ்டிபிஐ தலைவர் கே.எஸ்.ஷான் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பாஜகவின் மாநில நிர்வாகி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பாஜக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 6 ஆர்எஸ்எஸ் காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட ஆம்புலன்ஸ் ஒன்றும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா மாவட்டத்தில் வன்முறை ஏற்படக் கூடும் என்பதால் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது


Share this News:

Leave a Reply