இளம் பெண்ணை ஆசிரமத்தில் வைத்து வன்புணர்வு செய்த சாமியார் கைது!

பிரயாக்ராஜ் (13 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சீவ் குமார் ராய் என்கிற சஞ்சீவ் மஹாராஜ் என்ற சாமியார் அவரது ஆசிரமத்திற்கு பூ கொண்டு சென்ற 14 வயது இளம் பெண்ணை பிரசாதம் தருவதாகக் கூறி ஏமாற்றி ஆசிரமத்தின் உள்ளே அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் முயற்சித்தும் முடியவில்லை என அவரது தாயிடம் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பிரயாக்ராஜ் போலீசார் சாமியார் சஞ்சீவ் மஹாராஜை கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் வன்புணர்வு சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலமாக உருவாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply