விஸ்வரூபமெடுக்கும் ராமர் கோவில் நில பேர ஊழல் – மோடி விளக்கமளிக்க சாதுக்கள் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (26 ஜூன் 2021): அயோத்தி ராமர் கோவில் நில பேர ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமர் கோயிலுக்காக அயோத்தி நிலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு நிலம் வாங்கியதில் தான் தற்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரே நாளிலேயே ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் ரூ.18 கோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். இவ்விவகாரத்தை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கையில் எடுத்து உபி அரசையும் மத்திய அரசையும் சரமாரியாக விமர்சித்தி வருகின்றனர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்புகார்களுக்கு ராமர் கோயில் அறக்கட்டளை அளித்த விளக்கங்களை அயோத்தி சாதுக்கள் ஏற்க மறுக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக நேற்று சாதுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் ராமர் கோயிலுக்கான நில பேர ஊழல் புகாரில், உள்ளூர் பாஜகவினருக்கும் தொடர்பிருப்பதால் பிரதமர் மோடி தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


Share this News:

Leave a Reply