மதுரா வாரணாசியை அடுத்து இந்துத்துவாவினர் குறிவைக்கும் இன்னொரு மசூதி!

Share this News:

பதாவுன்(17 செப் 2022): உத்திர பிரதேசம் பதாவுன் ஜும்மா மசூதி முன்பு நீல்காந்த் மகாதேவா கோவிலாக இருந்தது என்று இந்துத்துவா சிந்தனையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில அழைப்பாளர் என்று கூறிக்கொள்ளும் முகேஷ் படேல் என்பவர் , பதாவுனில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
பதாவுனில் உள்ள ஜும்மா மசூதி வளாகம் ஒரு காலத்தில் இந்து மன்னர் மகிபாலின் கோட்டையாக இருந்ததாகவும், இந்த மசூதி, முஸ்லீம் ஆட்சியாளர் ஷம்சுதீன் அல்தமாஷ் என்பவரால் நீல்காந்த் மகாதேவாவின் பழமையான கோவிலை இடித்து கட்டப்பட்டது. என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட மூத்த சிவில் நீதிபதி விஜய் குமார் குப்தா, ஜமா மஸ்ஜித் வித்ரானிய சமிதி, சன்னி வக்ஃப் வாரியம், மத்திய மற்றும் உ.பி., அரசின் தொல்லியல் துறை, படாவுன் மாவட்ட நீதிபதி, உ.பி., அரசின் முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, உத்தரவிட்டார். இது தொடர்பாக செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்பாகவோ அல்லது அதற்கு முன்பாகவோ தங்கள் பதில்களைத் தாக்கல் செய்ய வேண்டும். என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ன் படி இதுபோன்ற வழக்குகளில் விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டுள்ளது.

பதாவுன் ஜும்மா மஸ்ஜித் அல்தமாஷ் என்பவரால் அவரது மகள் ரசியா சுல்தானாவின் பிறந்தநாளில் கட்டப்பட்டது என்று பதிவு செய்யப்பட்ட வரலாறு கூறுகிறது.

இந்த மசூதிக்கு அஜிமுஷான் ஜும்மா மஸ்ஜித் என்று பெயர். இது 800 ஆண்டுகள் பழமையான மஸ்ஜித் ஆகும், இது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான மசூதிகளில் ஒன்றாகும். இந்த மசூதியின் கட்டுமானம் கிபி 1210 இல் தொடங்கப்பட்டு கிபி 1223 இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply