மாணவிகள் விடுதி பாத்ரூம் வீடியோ லீக் – மாணவிகள் தற்கொலை முயற்சி!

சண்டிகர் (18 செப் 2022): பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததையடுத்து, பல்கலைக் கழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது..

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோவை வெளியிட்ட சக மாணவியை கைது செய்தனர்.

இதற்கிடைய வீடியோவில் உள்ள சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்று மொஹாலி காவல்துறை தலைவர் விவேக் சோனி கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனால் ஒரு மாணவி மயங்கி விழுந்ததாகவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணைய தலைவர் மனிஷா குலாட்டி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் யாரும் தப்பிக்க விட மாட்டார்கள் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதியளித்ததாக அவர் ANI இடம் கூறினார்.

பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் மாணவர்களை அமைதியாக இருக்குமாறு ட்வீட் செய்துள்ளார். எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் மற்றும் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியத்தைப் பற்றியது. ஊடகங்கள் உட்பட நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இது ஒரு சமூகமாக நமக்கும் சோதனை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply