கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த பைசர் நிறுவனம் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (06 டிச 2020): உலகளாவிய மருந்து நிறுவனமான ஃபைசர்,கோவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து மற்றும் பஹ்ரைனில் உரிமங்களைப் பெற்ற பின்னர் இந்தியாவில் பயன்படுத்த உடனடி ஒப்புதல் கோரியுள்ளது.

ஃபைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி, சோதனைகளில் 95 சதவிகித சாதகமான முடிவுகளைக் கொண்டிருப்பதாகக் கூ றியுள்ளது. பிரிட்டனும் பஹ்ரைனும் ஏற்கனவே ஃபைசருக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதனை அடுத்து மருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விநியோகிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.

ஆனால் இதுவரை , ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் பரிசோதிக்கப்படவில்லை. தற்போது, ​​இந்தியாவில் ஐந்து தடுப்பூசிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்னவென்றால், ஃபைசருக்கு ஒப்புதல் அளித்தால் , தடுப்பூசி மைனஸ் 70 டிகிரியில் வைக்கப்பட வேண்டும். மற்றும் அதிக விலை. இறக்குமதி செலவுகளும் ஏற்படும்.

ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து இந்தியாவில் உருவாக்கப்படும் , பாரத் பயோடெக் தடுப்பூசி மற்றும் ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஆகியவை பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply